ஏசி ரிமோட்டுகள் இனி அரசின் கையில்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஏசி ரிமோட்டுகள் இனி அரசின் கையில்!

ஏசியின் குளிர்நிலையை 24 டிகிரி செல்சியஸ் என்று அதன் உள்ளமைவை (Default Setting) வடிவமைக்க மத்திய மின்துறை திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறுகையில் ‘‘ஏசியின் உள்ளமைவு குளிர்நிலையை 24 டிகிரி செல்சியஸ் என்று வடிவமைக்க அரசு பரிசீலித்துள்ளது. இதன்மூலம் வீடு, அலுவலகங்களில் ஏசி பயன்படுத்தும்போது அதன் உள்ளமைவு குளிர்நிலையை 24 டிகிரி செல்சியஸ் என்றளவிலேயே பயன்படுத்துவதை கட்டாயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மின்சார சேமிப்பு மற்றும் பொது சுகாதார அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏசி சாதனங்களில் கட்டாயக் குளிர்நிலை 24 டிகிரி செல்சியஸ் என்பதைக் குறிப்பிட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். இந்த முடிவுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த சில மாதங்களிலேயே இது அமலுக்கு வரும்’’ என்று கூறியுள்ளார்.

‘‘ஏசி சாதங்களில் வெப்பநிலையை அதிகரிக்கும்போது மின்சார பயன்பாடு குறையும். ஒரு டிகிரி வெப்பநிலையைக் கூட்டினால் (அதாவது 16 டிகிரி என்ற நிலையில் இருந்து 17 டிகிரி நிலைக்குக் கூட்டினால்) 6% மின்சாரம் சேமிக்கப்படும். மேலும், அதிகமான குளிரில் இருப்பது தேவையில்லாத நோய்களுக்கு வழிவகுப்பத்தோடு, சுகாதாரத்துக்கும் கேடு விளைவிக்கும்.

மனித உடலின் சராசரி வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் ஆகும். பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் ஏசி சாதனங்கள் 18 முதல் 21 டிகிரி செல்சியஸில் இயங்குகின்றன. அதிகமான குளிர்நிலையில் இருப்பதால் உடலுக்குத்தான் கேடு. மேலும், மின்சாரம் தான் வீணாகிறது” என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், ஏசியின் குளிர்நிலையை 24 டிகிரி செல்சியஸ் என்ற சீரான நிலையில் வைப்பதால், மின்சக்தி திறன் ஆணையத்தின் (Bureau of Energy Efficiency) கூற்றின்படி இந்தியாவில் 6% வீடுகளில் மட்டுமே ஏசி இருக்கிறது. ஏசி பயன்பாட்டாளர்கள் அனைவருமே, ஏசி குளிர்நிலையை 24 டிகிரி செல்சியஸில் பயன்படுத்தினால் 20 பில்லியன் யூனிட் மின்சாரம் மிச்சமாகும்.

இத்தகைய முறை ஜப்பானில் அமலில் இருக்கிறது. அங்கு 28 டிகிரி செல்சியஸ் என்றளவிலேயே எல்லா ஏசி சாதனங்களிலும் உள்ளமைவு கட்டமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here