இன்ஜி., கல்லூரிகளில் காலியாகும் இடங்கள்... 80 ஆயிரம்!* *🔶அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், ஜூலையில் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே, 80 ஆயிரம் இடங்கள் காலியாகி உள்ளன.* *🔶இன்ஜி., படித்தவர்களுக்கு, குறைந்த சம்பளத்தில் கூட, வேலை கிடைக்காத நிலைமை உருவாகி உள்ளதால், பெரும்பாலான மாணவர்கள், அந்தப் படிப்புகளில் சேர ஆர்வம் காட்ட வில்லை என, தகவல் வெளியாகி உள்ளது* *🔶அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு, *தமிழக அர - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்ஜி., கல்லூரிகளில் காலியாகும் இடங்கள்... 80 ஆயிரம்!* *🔶அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், ஜூலையில் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே, 80 ஆயிரம் இடங்கள் காலியாகி உள்ளன.* *🔶இன்ஜி., படித்தவர்களுக்கு, குறைந்த சம்பளத்தில் கூட, வேலை கிடைக்காத நிலைமை உருவாகி உள்ளதால், பெரும்பாலான மாணவர்கள், அந்தப் படிப்புகளில் சேர ஆர்வம் காட்ட வில்லை என, தகவல் வெளியாகி உள்ளது* *🔶அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு, *தமிழக அர

*🔶அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு, *தமிழக அரசு சார்பில், இந்தாண்டு, *ஆன்லைன்'*
*கவுன்சிலிங்* *நடத்தப்படுகிறது*

*🔶இதற்கு, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, ஜூன், 8 முதல், 17 வரை, 42 உதவி மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது*

*🔶அதில், 1.10 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்*

*🔶மீதமுள்ள, 50 ஆயிரம் பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ள னர்*

*🔶அதனால், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற, 1.10 லட்சம் பேருக்கு மட்டும், வரும், 28ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடபடுகிறது. ஆப்சென்ட் ஆனவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது*

*🔶சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற, 1.10 லட்சம் பேரிலும், தங்களுக்கு பிடித்தமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு கிடைக்காமல், 12 ஆயிரம் பேர் வரை, இன்ஜினியரிங் படிப்பில் சேர வாய்ப்பில்லை. எனவே, அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 1.78 லட்சம் இடங்களில், 80 ஆயிரம் இடங்கள் வரை காலியாகும் நிலைமை உருவாகியுள்ளது*

*🎯🎯கல்லுாரிகள் அதிர்ச்சி*

*🔶மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த*
*மாற்றத்தால்* *இன்ஜினியரிங் கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன*

*🔶தற்போதைய நிலையில், மீதமுள்ள நிர்வாக இடங்களை யாவது முழுமையாக நிரப்ப வேண்டும்; இல்லையெனில், மாணவர் எண்ணிக்கை சரிந்து,கல்லுாரிகளை நடத்த முடியாத நிலை ஏற்படும்*

*🔶எனவே, கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்துள்ள, கணிதப்பிரிவு மாணவர்களை இழுத்து, குறைந்த கட்டணத் தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்க, சில கல்லுாரிகள் முயற்சி மேற்கொண்டு உள்ளன*

*🎯🎯வேலைவாய்ப்பு இல்லை*

*🔶அதேநேரத்தில், இன்ஜினியரிங் மீதான மாயை குறைந்துள்ளது குறித்து, பெற்றோர் கூறிய தாவது:இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களில் பலர், உரிய காலத்தில், தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிவதில்லை. படித்து முடித்தாலும், குறைந்த சம்பளத்தில் கூட வேலை கிடைப்ப தில்லை*

*🔶மாணவர்கள் எதிர்பார்க்கும் அள விற்கு, பெரிய அளவிலான வேலை வாய்ப்பும் இல்லை. இதனால், நான்கு ஆண்டு களாக படிப்புக்காகும் செலவை, மீட்டு எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, கடன் இல்லாமல் படிக்க வைக்க, குறைந்த கட்டணத் தில், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில், பிள்ளைகளை சேர்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here