*நடப்பு ஆண்டின் 4வது காலாண்டில் ஜிடிபி 7.7% ஆக அதிகரிப்பு : வளர்ச்சி விகிதத்தில் சீனாவை வீழ்த்தியது_*
டெல்லி : கடந்த நிதியாண்டிற்காண நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.7% ஆக உள்ளது. 2017 -2018ம் ஆண்டின் 4வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.7% அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியல் துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஒவ்வொரு காலாண்டிலும் ஜிடிபி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. முதல் காலாண்டில் 5.6%, இரண்டாவது காலாண்டில் 6.3%, மூன்றாவது காலாண்டில் 7% இருந்தது. தற்போது 4வது காலாண்டில் இந்த வளர்ச்சி விகிதம் 7.7% ஆக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம், சீனாவை வீழ்த்தி உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
விவசாயம், கட்டுமானம் , உற்பத்தி ஆகிய 3 துறைகளிலும் ஜிடிபி கணிசமாக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது 2017 -2018ம் நிதியாண்டிற்காண நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.7% ஆகவே உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டை ஒப்பிடும் போது 0.4% குறைவாகவும் , தற்போது கச்சா எண்ணெய் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக