TNPSC குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

TNPSC குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு!

குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கான வயது உச்ச வரம்பு 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று கூடிய சட்டசபையில் விதி எண் 110இன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற குரூப்-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை எழுதுவோருக்கான வயது உச்ச வரம்பினை உயர்த்துமாறு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அதன்படி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு உள்ள வயது உச்ச வரம்பினைப் போல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1, 1ஏ, 1பி பணியிடங்களுக்கு தற்போதுள்ள எஸ்.சி/எஸ்டி/எம்பிசி/ பிசி/ மற்றும் டிஎன்சி பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 35லிருந்து 37 ஆகவும், இதர பிரிவினருக்கு தற்போதுள்ள வயது உச்ச வரம்பு 30லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

மேலும் , 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும்; கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மேலும் 264 பாடப்பிரிவுகள் புதிதாக உருவாக்கப்படும்; ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் எனவும் முதல்வர் படித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here