சீதையைக் கடத்தியது ராமனா? பனிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சீதையைக் கடத்தியது ராமனா? பனிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில்


”சீதையை ராமன் கடத்தியதாக” குஜராத் மாநிலத்தின் பனிரெண்டாம் வகுப்பு சமஸ்கிருதப் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

சீதையை ராவணன் கடத்தியதாகத்தான் நாம் ராமாயணத்தில் படித்திருப்போம். இது பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவனுக்கு கூட தெரிந்த விசயம். ஆனால், இந்து மதக் கலாச்சாரங்களை கட்டிக்காப்பதாகக் கூறும் குஜராத்தில் இப்படி ஒரு வரலாற்றுப் பிழை ஏற்பட்டிருப்பது சுவாரசியத்தை உண்டாக்கியிருக்கிறது.

குஜராத் மாநில பனிரெண்டாம் வகுப்பு சமஸ்கிருத பாடப்புத்தகத்தின் 106 ஆவது பக்கத்தில், ’சமஸ்கிருத இலக்கியம் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில், ராமனின் ஒழுக்கத்தையும் மேன்மையையும் வர்ணித்து மிகுந்த ரசனையுடன் அழகிய புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இதில், ராமன் சீதையைக் கடத்திச் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராமர் சீதையை கடத்திச் செல்லும் போது லட்சுமணனின் விவரணை மிகுந்த ரசனையுடன் விவரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்தப் பாடத்தில் தொடக்கத்திலிருந்தே அதிகமான எழுத்துப் பிழைகளும் இருக்கின்றன. இந்தத் தகவல் பிழையானது ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் மட்டும் தான் இருக்கின்றது. குஜராத்தி மொழி பாடப்புத்தகத்தில் சரியான தகவல்கள் இருக்கின்றன. இது தொடர்பாக அந்த மாநில பள்ளி கல்வி இயக்குனரிடம் கேட்டபோது, "இது மொழிபெயர்ப்பு பிழையாகும். ராவணனுக்கு பதிலாக ராமர் பெயர் இடம் பெற்றுள்ளது" எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here