டீக்கடைக்காரரின் மகள் போர் விமானியானாக தேர்வானார்.. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

டீக்கடைக்காரரின் மகள் போர் விமானியானாக தேர்வானார்..


இந்திய விமானப் படையின் போர் விமானியாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில், இந்திய விமானப் படையின் போர் விமானிக்கான தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதியிருந்தனர். கடந்த 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 22 பேர் போர் விமானி பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆன்சல் கங்க்வாலும் (24) ஒருவர்.

ஆன்சலின் தந்தை சுரேஷ், மத்தியபிரதேசத்தில் நீமுச் பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். “எனது மகளின் படிப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்காக கடன் வாங்கிதான் படிக்க வைத்தேன். எனது முயற்சி வீண் போகவில்லை. எனது மகள் போர் விமானி பணிக்கு தேர்வானதால் எனது டீக்கடை பிரபலமாகிவிட்டது” என்று பெருமையாக கூறினார்.

ஆன்சல் கங்க்வால் கூறும்போது, ‘‘பள்ளி, கல்லூரி படிப்பின்போது விளையாட்டுகளில் ஆர்வமாக பங்கேற்பேன். கூடைப்பந்து, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பரிசுகளைப் வென்றுள்ளேன். இதற்கிடையில், கல்லூரி படிப்புக்குப் பிறகு சப்-இன்ஸ்பெக்டர் தேர்விலும் வெற்றி பெற்று பயிற்சியில் சேர்ந்தேன். ஆனால், எனது லட்சியம் போர் விமானியாக வேண்டும் என்பதே. காரணம், நான் 12ஆம் வகுப்பு படிக்கும்போது, உத்ரகண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களை இராணுவத்தினர் மீட்டெடுத்த காட்சிகள் என்னை இராணுவ போர் விமானியாக சேர ஊக்கப்படுத்தியது. எனவே மிகக் கடினமாக உழைத்து இப்போது போர் விமானி பணிக்கு தேர்வு பெற்றுள்ளேன்’’ என்றார்

இதுதொடர்போக, மத்தியபிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் ட்விட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் வீட்டிற்கு வந்து அவரது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். பல்வேறு தலைவர்கள் ஆன்சலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் வரும் 30ஆம் தேதி ஆன்சல் பணியில் சேருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here