*💎கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு, 'நெட்' தேர்வு தேர்ச்சி அல்லது, பிஎச்.டி., முடித்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது*
*💎தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவி பேராசிரியர் பணியில் இருக்கும் பலர், நெட் தேர்வில் தேர்ச்சி பெறாமலும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பை முடிக்காமலும் உள்ளனர்*
*💎இந்நிலையில், உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், ஆசிரியர்களின் நியமனத்துக்கு, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., பல்வேறு முடிவுகளை மேற்கொண்டு உள்ளது*
*💎இதன்படி, 'அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளிலும், 2009ம் ஆண்டு விதிமுறைகளின் படி, பிஎச்.டி., முடித்தவர்கள் அல்லது நெட் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களையே, உதவி பேராசிரியராக நியமிக்க வேண்டும்' என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது*
*💎இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பல்கலைகளும், பணி நியமன விதிகளை மாற்றியுள்ளன*
*💎மேலும், தங்கள் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் நியமனத்துக்கு, யு.ஜி.சி.,யின் விதியை பின்பற்ற வேண்டும் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக