பள்ளி கல்வி இயக்குனராக ராமேஸ்வர முருகன் நியமனம்*புதிய இயக்குனருக்கு, பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளி கல்வி இயக்குனராக ராமேஸ்வர முருகன் நியமனம்*புதிய இயக்குனருக்கு, பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.

*🔶தமிழக பள்ளிக் கல்வி துறை இயக்குனராக, ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டு உள்ளார்*

*🔶பள்ளிக் கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றதும், தொடக்கக் கல்வி இயக்குனராக இருந்த, இளங்கோவன், பள்ளிக் கல்வி இயக்குனராக, 2017, ஏப்., 26ல், நியமிக்கப்பட்டார். இவர், 14 மாத பணிக்கு பின், நேற்று முன்தினம், ஓய்வு பெற்றார்*

*🔶புதிய இயக்குனராக, யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு, பள்ளிக் கல்வித் துறையில் எழுந்தது*

*🔶அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குனர், கருப்பசாமி ஆகியோர், முன்னிலை பட்டியலில் இருந்தனர்*

*🔶இதில், ஏற்கனவே, பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக இருந்த அனுபவம் பெற்றவர் என்பதால், ராமேஸ்வர முருகன், தேர்வு செய்யப்பட்டு உள்ளார்*

*🔶அவரை, மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குன ராக நியமித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை, நேற்று உத்தரவிட்டுள்ளது*

*🔶தற்போதைய நிலையில், பள்ளிக் கல்வியில், அமைச்சர் செங்கோட்டையன், முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், செயலர் உதயசந்திரன், முந்தைய இயக்குனர் இளங்கோவன் கூட்டணியில், பெரும் மாற்றங்கள் நடந்துள்ளன*

*🔶அந்த மாற்றங்களுடன், புதிய திட்டங்களையும் புகுத்த வேண்டும் என்பதால், புதிய இயக்குனருக்கு, பெரும் சவால்கள் காத்திருப்பதாக, பள்ளிக் கல்விவட்டாரங்கள் தெரிவித்தன*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here