திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில், ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது, வரும் 11ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் தங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு கேட்டனர்.
பின்னர், ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
7வது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்பட எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசை கண்டித்து வரும் 11ம்தேதி முதல் ஜாக்டோ- ஜியோ தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்.
சென்னையில் அன்று உயர்மட்ட குழு நிர்வாகிகள் மட்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறோம்.
அதேநேரம் மாவட்ட தலைநகரங்களில் பள்ளிகளில் மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் மாலை நேரங்களில் போராட்டம் நடைபெறும். இந்த நியாயமான போராட்டத்துக்கு அனைத்து கட்சி தலைவர்களையும் சந்திக்க உள்ளோம்.
முதலாவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். அவரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக