கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் ஊதியத்தை நான்கு மடங்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் கிராமப்புற பகுதிகளில் 3 லட்சத்து எழுபதாயிரம் பேர் கிளை அஞ்சல் அலுவலர்களாகவும், உதவி அஞ்சல் அலுவலர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது ரூ.2,295 முதல் ரூ.4,415 வரை ஊதியம் பெறுகின்றனர்.

கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள், சம்பள உயர்வு தொடர்பாக, கமலேஷ் சந்திரா கமிட்டியின் ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி, 16 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை நிர்வாணப் போராட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உட்பட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்தன.

ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைவதைத் தொடர்ந்து, கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் ஊதியத்தை நான்கு மடங்காக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

2016 ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும், ஊதிய உயர்வு நிலுவை ஒரே தவணையில் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் ரூ.2,295 ஊதியம் பெற்றவர்கள் இனி 10,000 ரூபாய் பெறுவார்கள். ரூ.4,415 ஊதியம் பெற்றவர்கள் இனி 14,500 ரூபாய் பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here