நீட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த கல்பனா குமாரி குறித்து புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
கடந்த மே 6ஆம் தேதி நடந்துமுடிந்த இந்தாண்டுக்கான நீட் தேர்வு முடிவு ஜூன் 4ஆம் தேதி வெளியானது. இதில், பிகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி என்றமாணவி 720 மதிப்பெண்களுக்கு 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தேர்வைஎழுதினர். வெறும் 35.99 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவி மட்டும் அகில இந்திய அளவில் 12ஆம்இடத்தைப் பிடித்தார்.
ஆனால் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட வட மாநில மாணவர்கள்தான் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிப்பாக, கல்வி மற்றும் போட்டித்தேர்வுகளில் பின்தங்கி இருந்த பிகார் மாநிலத்திலிருந்து மாணவி ஒருவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தற்போது, நீட் தேர்வில் முதலிடம் பிடித்த கல்பனா குமாரி குறித்த சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இவர் பிகார் மாநில கல்வித்திட்டத்தின் கீழ் பனிரெண்டாம்வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இதில் 500க்கு 433 மதிப்பெண்கள் பெற்று அறிவியல் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். ஆனால் அவருக்குபனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்குத் தேவையான வருகைப் பதிவு இல்லை. இருப்பினும், விதிமுறையை மீறி தேர்வு எழுத அனுமதிஅளிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இவர் டெல்லியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாகவே தீவிரமாக தேர்வுக்குத் தயாராகியுள்ளார். டெல்லியில் தங்கி பயிற்சி பெற்றதால்,அவரால் பிகாரில் உள்ள பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. பொதுத் தேர்வு எழுத 75 சதவிகித வருகைப் பதிவு கட்டாயம். ஆனால் அவருக்கு போதிய வருகைப்பதிவு இல்லாதபோதும், சிறப்பு அனுமதி வழங்கி அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பிகார் மாநில கல்வி அமைச்சர் கிருஷ்ணானந்த் வர்மா கூறுகையில், ”கல்பனா குமாரி தகுதி பெற்றவர் என்பதை நீட் தேர்வு மூலம் நிரூபித்துள்ளார்.அவர் பாராட்டப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு தேவையற்ற சர்ச்சைகளை எழுப்பக் கூடாது. உரிய விதிமுறைகளைப் பின்பற்றியே தேர்வுக்குஅனுமதிக்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத குறைந்தபட்ச வருகைப் பதிவு அவசியம் என்றவிதிமுறை இல்லை என பிகார் மாநில கல்வித் துறையும் விளக்கம் அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக