அனைத்து இந்தியர்களுக்கும் மலிவு விலையில் மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தர தங்களின் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் பலனடைந்தவர்களுடன் பிரதமர் மோடி இன்று(ஜூன் 7) கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசும்போது, குறைந்த விலையில் அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ சேவை கிடைப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். நீண்டகால நோய்கள் காரணமாக நடுத்தர வர்க்கம் சந்திக்கும் பொருளாதார சுமை குறித்தும் பேசினார்.
மேலும், “ ஏழைகள் குறைந்த விலையில் மருந்துகளைப் பெறவேண்டும் என்பதாலேயே, 'பிரதன் மந்த்ரி பார்திய ஜனுஸாதி பரி யோஜனா திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் பல்வேறு தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இத்திட்டத்தால் பயனடைந்தவர்களும் பிரதமருடன் கலந்துரையாடினர்.
ஒடிசாவைச் சேர்ந்த சுபாஸ் மொஹந்தி என்பவர் பேசும்போது, தான் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னர் மருந்து வாங்க மாதத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் செலவிட்ட நிலையில், இந்த திட்டத்தினால் ரூ. 400 மட்டுமே செலவிடுவதாகவும் தெரிவித்தார்.
ஜார்கண்டை சேர்ந்த அஞ்சான் என்பவர், தான் பிரதன் மந்த்ரி பார்திய ஜனுஸாதி பரி யோஜனா திட்டத்தின் கீழ் மருந்தகத்தை நடத்தி வருவதாகவும் இத்தகைய கடைகளை அமைப்பதில் எத்தகைய முறைகேடுகளும் கிடையாது. அனைத்துமே வெளிப்படையானது என்றும் பிரதமரிடம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக