மூடப்படும் வெளிநாட்டுக் கிளைகள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மூடப்படும் வெளிநாட்டுக் கிளைகள்!



வெளிநாட்டில் உள்ள 9 வங்கிக் கிளைகளை மூடுவதற்கான பணியில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இறங்கியுள்ளது.

சீரமைப்பு மற்றும் செயல்திறன் மேம்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வெளிநாட்டில் உள்ள தனது கிளைகள் சிலவற்றை மூடி வருகிறது. இவ்வங்கிக்கு உலகின் 36 நாடுகளில் சுமார் 190 கிளைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. இதில் 9 வங்கிக் கிளைகளின் செயல்பாட்டை நிறுத்துவதற்கு எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது. சீரமைப்பு பணியின் முதற்கட்டமாக வெளிநாட்டில் உள்ள ஆறு கிளைகள் ஏற்கெனவே மூடப்பட்டன. வங்கிகளின் செயல்பாட்டுக்காகச் செலவிடும் மூலதனத்தைத் தகுதியான இடங்களில் பயன்படுத்த முடிவெடுத்தே கிளைகளை மூடும் பணியில் எஸ்பிஐ ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் எஸ்பிஐ வங்கியின் சில்லறை மற்றும் டிஜிட்டல் வங்கிப் பிரிவின் நிர்வாக இயக்குநரான பிரவீன் குமார் குப்தா பேசுகையில், “சீரமைப்பு பணியின் ஒருகட்டமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டில் உள்ள ஆறு கிளைகளை நாங்கள் மூடியுள்ளோம். வெளிநாட்டில் உள்ள அனைத்துக் கிளைகளும் சிறப்பாகச் செயல்படுவதில்லை. எங்கு சிறப்பான செயல்பாடு இருக்கிறதோ அங்கு மூலதனத்தைச் செலவிட்டால் மட்டுமே தகுந்த பலன் இருக்கும். வெளிநாட்டில் உள்ள வங்கிக் கிளைகள் மூடப்பட்டாலும் அந்நாட்டில் இனி சேவை வழங்கப்போவதில்லை என்று அர்த்தமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

வங்கி சீரமைப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் உள்ள 216 கிளைகளின் செயல்பாட்டைப் பரிசீலிக்க வேண்டும் என்று சென்ற நவம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியிருந்தது. ஆனால் அதற்கு முன்னரே எஸ்பிஐ வங்கி வெளிநாட்டில் உள்ள தனது கிளைகளில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here