மகப்பேறு திருத்த சட்டத்தின் காரணமாக, இந்தியாவில் பத்து துறைகளில் 11 லட்சம் முதல் 18 லட்சம் வரையிலான பெண்கள் வேலையை இழப்பார்கள், அனைத்து துறைகளிலும், 1.2 கோடி பெண்கள் வேலையை இழக்க நேரிடும் என டீம்லீஸ் என்ற வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மகப்பேறு திருத்த சட்டம் பெண்களுக்கு பயனளிக்க கூடியதாக இருந்தாலும், இதிலும் சில எதிர்மறையான தாக்கங்கள் இருக்கின்றன. இந்த சட்ட திருத்தத்தினால், 2018-2019 ஆம் நிதியாண்டில், கால் சென்டர்,விமான துறை, ஐடி, ரியல் எஸ்டேட், கல்வித் துறை,உற்பத்தி, வணிகம் மற்றும் சில்லறை வணிகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் பெண்களை ஒரு ஆண்டு வரை மட்டுமே வேலைக்கு எடுத்து கொள்ளும் நிலையில் இருக்கின்றன.
பெரிய, தொழில் ரீதியான நிறுவனங்கள் மற்றும் நடுத்தர அளவிலான பொதுத்துறை நிறுவனங்கள் இந்த திருத்தத்தை திருப்திகரமாக ஆதரிக்கின்றன. ஆனாலும், நடுத்தர பன்னாட்டு நிறுவனங்கள் பல பெண்களுக்கான தேவையை குறைத்து வருகின்றன.
இந்த மசோதா புதிய பெண் தொழிலாளர்களை பணியில் சேர்ப்பதை கணிசமாக பாதிக்கும் மற்றும் எதிர்கால செலவினங்களுக்காக ஈடுசெய்யும் நோக்கில் திறமைக்கேற்ற சம்பளத்தை பெண்களுக்கு வழங்கமாட்டார்கள்.
இதுகுறித்து டீம்லீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் சக்ரவர்த்தி, தற்போது, இந்தியாவில் மொத்த ஊழியர்களில் 27 சதவிகிதத்தினர் பெண்கள், இதில், 14 சதவிகிதத்தினர் முறை சார்ந்த துறையில் வேலை செய்கிறார்கள். கனடா, நார்வே நாடுகளுக்கு அடுத்தபடியாக, இந்தியா மகப்பேறு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இது பெண்களுக்கு பயனளிக்க கூடிய ஒன்று. மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்களிலிருந்து,ஒன்பது மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீண்ட விடுப்பு வருவதால், அவர்களிடமிருந்து வேலை வாங்குவதற்காக நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளிக்கின்றன. அப்படியிருந்தாலும், வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு தேவையான உதவிகளை நிறுவனம் செய்து தர வேண்டும். அதே சமயத்தில், குழந்தையை கவனிக்க அதிகமான நேரம் தேவைப்படும். இதற்கிடையில் வேலையும் செய்ய வேண்டும். இதனால், இவை அனைத்தையும் உறுதி செய்த பிறகே பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்க முடியும். அதனால், பெண் ஊழியர்களை கொண்ட நிறுவனம் அதிக செலவினங்களை சந்திக்க நேரிடும். இதனால், ஒருசில நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு எடுப்பதே குறைத்து வருகின்றன என கூறினார்.
இந்த காரணத்தினால் பெண்களை வேலை எடுக்காமல் இருப்பதும் நல்லதல்ல. தொழில் நிறுவனங்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து, தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த வேண்டும். அதன் விளைவாக, தேசிய வருமானமும் மேம்படும்.இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிதியுதவி உள்பட அனைத்து முழுமையான ஆதரவையும் அரசு வழங்க வேண்டும் என இணை நிறுவனர் சக்ரவர்த்தி கூறினார்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக