சமீபத்தில் திருவள்ளுவர் மாவட்டத்தைச்சேர்ந்த பகவான் என்ற ஆசிரியர் பணி மாற்றம் செய்யப்படும்போது அவரை போக வேண்டாம் என மாணவர்கள் கட்டிப்பிடித்து அழுதது நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பகவான் ஏற்படுத்தியுள்ள தாக்கம் நமது பள்ளி கல்வி நிர்வாகத்தை அவசியமாக மாற்றப்பட வேண்டிய தேவையையும் உணர்த்தியுள்ளது.
நாடு முழுவதும் பகவானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இவ்வளவு துாரம் மாணவர்களிடையே மதிப்பையும் அன்பையும் பெற்ற பகவான் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறுகையில்,
நான் ஆசிரியர் என்பதை மீறி மாணவர்களிடம் நெருங்கி பழகுவேன். அவர்களிடம் நண்பர்களாக பழகி அவர்களின் குடும்ப சூழ்நிலையை ’புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அவர்களுக்கு பாடம் சொல்லித்தருவேன். அவர்களின் எதிர்காலத்தை பற்றி கேட்டு உற்சாகப்படுத்துவேன். நான் நடத்த வேண்டியதை சினிமா புரொஜக்டர்கள் மூலம் நடத்துவேன் அதனால் அவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருப்பது மாதிரி உணராமல் ஏதோ சினிமா தியோட்டரில் அமர்ந்திருப்பது போன்று உணர்வார்கள். அந்த முறை அவர்களுக்கு எதையும் தெளிவாக கற்றுக்கொள்ள உதவியது. இதனால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு உறவுப் பிணைப்பு உருவானது. நான் அவர்களுக்கு ஆசிரியர் மட்டுமல்ல அவர்களின் நண்பர் மற்றும் சகோதரர் என்று கூறுகிறார்.
இது மட்டுமின்றி பகவான் ஏற்படுத்திய தாக்கம் நமது பள்ளி நிர்வாகம் குறி்த்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆசிரியர் பணிக்கு கல்வித்தகுதியை மட்டுமே வைக்கப்படுகின்றது தவிர பணிக்கான அவரது அர்ப்பணிப்பு முன்வைக்கப்படுவதில்லை. ஏனெனில் ஆசிரியர் பகவானே அதற்கு ஒரு உதாரணம். அவரே ஒரு தொலைக்காட்சிக்கு அளி்த்த பேட்டியில் தான் ஒரு சாதாரணமானவன். ஆங்கிலமெல்லாம் அவ்வளவாக தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது அர்ப்பணிப்புதான் மாணவர்களுக்கு கற்பிக்க தன்னை தயார் பண்ண துரண்டியது என்கிறார்.
பகவானுக்கு சீனியாரிட்டி இல்லை என்பதால்தான் அவர் பணி மாற்றம் செய்யப்படுகிறார். தமிழக பள்ளிகளில் நி்ர்வாக முறைகள்தான் சிறந்த ஆசிரியர்கள் உருவாகத்தடையாக இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக