*💎பதவி உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடும் வரை தொடர் போராட்டம் நடத்தப் போவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்*
*💎இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சங்கர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு*
*💎தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்றது*
*💎இதில், ஜூன் 19ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது*
*💎அதன்படி, ஜூன் 21இல் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகம் முழுவதும் காலிப்பணியிடம் இல்லை எனவும், அதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டாதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கிடையாது எனவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது*
*💎அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 15 ஆண்டுகளாக தமிழக பள்ளிக் கல்வித் துறை புறக்கணித்து வருகிறது*
*💎எனவே இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு குறித்து உரிய அரசாணை வெளியிடப்படும் வரை தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக