டிஸ்லெக்சியா குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சாதனத்தை கண்டுபிடித்த சென்னை மாணவர்கள் ஹேக்கதான் தொழில்நுட்ப போட்டியில் முதல் பரிசு பெற்றனர்.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டி, ஹேக்கதான் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் புதியவற்றை உருவாக்கும் விதன இந்த போட்டியின் 2வது நிகழ்வு பிலானி, உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற்றது.
இந்த நிலையில் பிலானியில் 13 குழுக்கள் பங்கேற்ற இறுதி கட்டப்போட்டியில் சென்னையை சேர்ந்த கே.சி.ஜே இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்ப சாதனம் 2018ம் ஆண்டுக்கான ஹேக்கதான் போட்டியில் முதலிடம் பிடித்தது.
அவர்கள் டிஸ்லெக்சியா எனப்படும் எழுதுவதில், வாசிப்பதில், எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளை அடையாளம் காண்பதில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சாதனத்தை கண்டுபிடித்ததற்காக இந்த பரிசு வழங்கப்பட்டது. 2வது இடம் டெல்லிக்கும் 3வது இடம் பெங்களூரூக்கும் கிடைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக