*🌐கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., படிப்புகளுக்கு மவுசு!* ''கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., பாடப்பிரிவுகளில் பெர - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*🌐கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., படிப்புகளுக்கு மவுசு!* ''கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., பாடப்பிரிவுகளில் பெர

''கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., பாடப்பிரிவுகளில் பெரிதளவில் வேறுபாடு இல்லை.

இவ்விரண்டில், எந்த பாடப்பிரிவை தேர்வு செய்து படித்தாலும், சிறப்பான எதிர்காலம் உண்டு,'' என, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேசினார்.'

தினமலர்' நாளிதழ் சார்பில், கோவையில் நேற்று நடந்த 'உங்களால் முடியும்' நிகழ்ச்சியில், கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது:

எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மாற்றங்களை ஆய்வு செய்து, உயர்கல்வியில் பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.

துறைகள் எதுவாயினும், 'சிலபஸ்' தாண்டி படிப்பவர்களுக்கு மட்டுமே, வேலைவாய்ப்பு கிடைக்கும்.'ஆன்லைன்' கவுன்சிலிங் குறித்து பயப்பட வேண்டியதில்லை; முழுமையான பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத் தன்மையுடன், 'சாப்ட்வேர்' அறிமுகப்படுத்தி உள்ளனர்.

எக்காரணம் கொண்டும், 'பாஸ்வோர்டு' தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அண்ணா பல்கலையும் கேட்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கல்லுாரிகளையும், பாடப்பிரிவுகளையும் 'சாய்ஸ்' முறையில் பட்டியலிடும் போது, மிகவும் கவனம் செலுத்துங்கள். 'சாய்ஸ்' தேர்வு செய்வதில், கட்டுப்பாடு கிடையாது

.எதிர்காலத்தில், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., பாடப்பிரிவுகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதை தொடர்ந்து, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யுனிகேசன், இ.இ.இ., மெக்கானிக்கல், சிவில் என்ற வரிசையில் முக்கியத்துவம் அளியுங்கள். இன்றைய பாடத்திட்டத்துக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. எனவே, தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப, புதியவற்றை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

பதிவு செய்து வைத்துள்ள, மொபைல் எண்ணைப் பாதுகாப்பாக எப்போதும் கையில் வைத்துக் கொள்ள வேண்டும். மொபைல் இல்லாமல், கலந்தாய்வு செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது.

முடிந்தவரை, வீட்டில் கம்ப்யூட்டர் இல்லை எனில், பிரவுசிங் சென்டர், தனியார் கல்லுாரிகளுக்கு போகாமல், அண்ணா பல்கலை நோடல் மையங்களுக்கே சென்று பதிவு பணிகளை மேற்கொள்ளுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here