ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது தொழில் மேம்பாட்டுக்காகக் கொரியா டிரேட் இன்ஸ்யூரன்ஸ் கார்பரேஷன் நிறுவனத்திடம் 1 பில்லியன் டாலர் கடனுதவி பெற்றுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒரு அங்கம்தான் ரிலையன்ஸ் ஜியோ. இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டுக்காகக் கொரிய நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் டாலர் பெறுவதற்கான சமகால கடன் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் ஜியோ மேற்கொண்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்தும் ஏஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்திடமிருந்தும் தனக்குத் தேவையான உபகரணங்களை வாங்கப் போவதாக பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் ஜியோ தெரிவித்துள்ளது.
கொரிய நிறுவனத்தின் இந்த நிதியுதவியானது இந்தியாவிலேயே அந்நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய ஒப்பந்தம் என்றும், உலகளவில் தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய ஒப்பந்தமும் இதுதான் எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா & நியூசிலாந்து பேங்கிங் குரூப் லிமிடெட், ஹாங்காக் & ஷாங்காய் பேங்கிங் குரூப் கார்ப் லிமிடெட், பிஎன்பி பரிபாஸ், காமெர்ஸ் பேங்க் ஏஜி, சிட்டி பேங்க் என்.ஏ., ஐ.என்.ஜி. பேங்க், ஜேபி மோர்கன் சேஸ் பேங்க், பிசிஹோ பேங்க், எம்.யு.எஃப்.ஜி. பேங்க் உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் பங்கு கொண்டுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நடப்பு நிதியாண்டில் தனது தொழில் மேம்பாட்டுக்காக ரூ,60,000 கோடியை முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது. அதன்படியே தற்போது கடன் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக