மருத்துவம் படிக்க விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தவர்களின், தரவரிசை பட்டியல், நேற்று வெளியானது.
இதில், கோவை, சாய்பாபா காலனியைச் சேர்ந்த, கீர்த்தனா ரவி, 200க்கு, 200, 'கட் ஆப்' பெற்று, முதலிடம் பெற்றுள்ளார்.பாலக்காட்டில் 2016 - 17ம் ஆண்டில், பிளஸ் 2 முடித்துள்ளார்.
கடந்த ஆண்டும், இன்ஜினியரிங்கிற்கு விண்ணப்பித்து, 'டாப்பர்ஸ்' பட்டியலில் இடம் பெற்றார். ஆனால், இன்ஜினியரிங் படிக்கவில்லை.
மாறாக, புதுடில்லியில் உள்ள, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லுாரியில், பி.எஸ்சி., வேதியியல் படிப்பில் சேர்ந்து, படித்து வருகிறார்.
கீர்த்தனா ரவி கூறியதாவது: எனக்கு மருத்துவம் படிக்க விருப்பம் இல்லை;
அதனால், 'நீட்' தேர்வு எழுதவில்லை. ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்ற, லட்சியம் உள்ளது; அதற்கு ஏற்ற வகையில் தயாராகிறேன்.
டில்லி கல்லுாரியில் படித்தபடி, ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கும் செல்வதற்காக, அங்கு படிப்பில் சேர்ந்தேன்.சில காரணங்களுக்காக, இன்ஜினியரிங் விண்ணப்பித்தேன்.
டில்லி படிப்பை விட்டு, இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதா என்பதை, இன்னும் முடிவு செய்யவில்லை.
கனடாவில், உலக சமஸ்கிருத மாநாடு நடக்க உள்ளது. அதில் பங்கேற்க, அடுத்த வாரம் செல்கிறேன்.
அதன்பின், முடிவு எடுக்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக