சிவகங்கை, தபால்துறை அஜாக்கிரதையால் பாதிக்கப்பட்டு, தினமலர் செய்தியால் விமோசனம் கிடைத்த சிவகங்கை மாணவருக்கு மருத்துவப் படிப்பு தரவரிசை பட்டியலில் இடம் கிடைத்தது.
சிவகங்கை அருகே காஞ்சிரங்காலைச் சேர்ந்த வசந்த் 'நீட்' தேர்வில் 384 மதிப்பெண் பெற்றார்.
இவரது மருத்துவப் படிப்பு விண்ணப்பம் தபால்துறை அஜாக்கிரதையால் காலக்கெடு முடிந்து தாமதமாக சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு சென்றது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதால், வசந்த் விண்ணப்பம் ஏற்கப்பட்டது. நேற்று மருத்துவப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் ஒட்டுமொத்த தரத்தில் 1,645 வது இடம், பிற்பட்டோருக்கான தரத்தில் 1,017 வது இடம் கிடைத்தது.
அரசு, தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 3,355 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளதால், அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக