தமிழகத்தில் விபத்துகளைக் குறைப்பதே தமிழக அரசின் நோக்கம் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று ஜூன் 14 மதியம் 12 மணியளவில் குன்னூருக்குப் புறப்பட்டுச் சென்றது. மந்தாடா பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை ஓரத்தில் இருந்த 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில், 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர். தற்போது, சிலர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் லேசான காயம் அடைந்த மூன்று பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், படுகாயம் அடைந்த ஐந்து பேருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், தண்டுவடம் பாதித்த பெண்ணுக்கு 5 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்பட்டது. மொத்தம் 9 பேருக்கு ரூ.15.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று (ஜூன் 16) நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விபத்துகளைக் குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். தற்போது, தமிழகத்தில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக