எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு!

அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் சலுகைகள் வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மத்திய அரசுப் பணிகளில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அமைச்சர்கள் குழு ஆலோசனை செய்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் பிஜேபியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், இது தொடர்பாக மத்திய அரசு கண்டிப்பாக நீதிமன்றத்தை அணுகும் என உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 5) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், அரசியல் சாசன அமர்வில் விசாரணை முடியும் வரை சட்டத்துக்குட்பட்டு, ஏற்கெனவே உள்ள நடைமுறைபடி இட ஒதுக்கீடு வழங்கலாம் எனவும் தீர்ப்பளித்தது.

கடந்த ஜனவரி மாதம் வன்கொடுமை தடுப்பு சட்டம்; அரசுப்பணியில் பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு; பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு ஆகியவற்றில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here