மாணவா்களுக்கு கடிவாளம் போடும் பல்கலைக்கழகம்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாணவா்களுக்கு கடிவாளம் போடும் பல்கலைக்கழகம்*

திருச்சி: இளநிலைப் படிப்பிலோ, முதுநிலைப் படிப்பிலோ சோ்ந்துவிட்டு, பல ஆண்டுகள் கழித்து படிப்பை இனி நிறைவு செய்ய முடியாது.

படிப்பு காலம் முடிந்த 2 ஆண்டுகளுக்குள் தங்கள் படிப்பை நிறைவு செய்திட வேண்டும் என்று புதிய விதி நிகழ் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருவதாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் வழிகாட்டுதலின்படி ( கடித எண் 12-1/2015) 2018, மார்ச் 15-ஆம் தேதி நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில், யூனிபா்ம் ஸ்பேன் ப்ரீயடு நிகழ் கல்வியாண்டில் அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எனவே அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுகின்றன.

அதன்படி 2018-19 ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேரும் மாணவ, மாணவிகள் தங்கள் படிப்புக் காலம் முடிந்த அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பாடங்களில் அரியா்ஸ் இல்லாமல் படிப்பை முடித்திட வேண்டும்.

விதிவிலக்கு அளிக்கும் சூழ்நிலை ஏற்படுமாயின் மேலும் ஓராண்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.

இதற்காக பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்படும் தனிக்குழுவின் ஒப்புதல் அளித்திட வேண்டும்.

படிப்பை முடிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யும் மாணவா்கள் தனி மாணவா்களாகவே கருதப்படுவா். மேலும், இவா்கள் ரேங்கிங் பெறுவதற்கும் தகுதி பெற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here