UGC நீக்கம் ஏன் !- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்* யு.ஜி.சியை கலைப்பது குறித்து மத்திய மனிதவளத்துற - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

UGC நீக்கம் ஏன் !- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்* யு.ஜி.சியை கலைப்பது குறித்து மத்திய மனிதவளத்துற

யு.ஜி.சியை கலைப்பது குறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேஹர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

வரலாற்றுச்சிறப்பு மிக்க முடிவு எடுத்திருக்கிறோம். யுஜிசி அமைப்பை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி ஆணையம் கொண்டு வருகிறோம்.

அதற்கான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலும், கல்வித்துறையை மேம்படுத்தி, மாணவர்களின் திறனைமேம்படுத்தும் வகையில் மாற்றப்படுகிறது எனத் தெரிவித்தார்.

இப்போது இருக்கும் யுஜிசி என்பது பல்கலைக்கழகங்களுக்கு நிதிகளையும் ஒதுக்கி, கல்வி மேம்பாட்டையும் பார்த்துக்கொண்டிருந்தது.

ஆனால், உயர் கல்வி ஆணையம் முழுக்க கல்வி தொடர்பான பணிகளை மட்டுமே கவனிக்கும்.

மாறாக, நிதிதொடர்பான பணிகள், பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்குதல் போன்றவை மனித வளத்துறைஅமைச்சகத்தின் கீழ் வரும் என வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதவளத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் உயர் கல்வி ஆணையம் குறித்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள், கல்வித்துறையில் தொடர்புடையவர்கள் தங்களின் கருத்துக்களை ஜுலை 7-ம் தேதி மாலை 5-மணிக்குள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வரைவுமசோதா, வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இதற்கு முன் தொழிற்நுட்ப கல்வி, ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான பயிற்சி கவுன்சில், யுஜிசி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து ஒரு அமைப்பாக உருவாக்க அரசு திட்டமிட்டு இருந்தது.

இப்போதுள்ள யுஜிசி அமைப்பு பல்கலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் போன்ற பணிகளைச் செய்வதால், கல்விநிலையங்களை கண்காணிக்க முடிவதில்லை, கல்வித்தரத்தை உயர்த்த முடியவில்லை, ஆதலால், உயர்கல்வி கண்காணிப்பை வலிமைப்படுத்தும் நோக்கில் தேசிய உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here