சென்னையில் ஆர்.கே.நகரில் தொடங்கப்பட்டுள்ள அரசுக் கல்லூரியில் பி.ஏ தமிழ், பி.எஸ்ஸி கணிதம், பி.எஸ்ஸி கணினி அறிவியல், பி.காம்., பி.எஸ்ஸி புள்ளியியல் படிப்புகளும்,
பெரும்பாக்கத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல், வேதியியல், பி.சி.ஏ., பி.காம் படிப்புகளும்,
சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரியில் பி.ஏ., தமிழ்ப் படிப்பும் புதியதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ படிப்பும்,
உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளும்,
விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பி.எஸ்ஸி வேதியியல், இயற்பியல், புள்ளியியல் மற்றும் பி.எஸ்.டபிள்யூ பாடத்தையும்,
விழுப்புரம் அறிவியல் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி விலங்கியல் பாடத்தையும்,
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.காம் பாடத்தையும்,
திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ மற்றும் பி.எஸ்ஸி வேதியியல் படிப்பையும் புதியதாகத் தொடங்கவிருக்கின்றனர்.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்தையும்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி வேதியியல் மற்றும் இயற்பியல் படிப்புகளும்,
சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி புள்ளியியல் படிப்பையும்,
நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ வரலாறு, இயற்பியல், வேதியியல் படிப்பையும்,
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி பி.எஸ்ஸி கணினி அறிவியல் படிப்பையும்,
கும்பகோணம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி தாவரவியல் படிப்பும் தொடங்கவுள்ளன.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.லிட் (தமிழ்),
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ தமிழ், பி.எஸ்ஸி இயற்பியல், கணிதம் பாடப்பிரிவுகளும்,
எம்.வி.எம் திண்டுக்கல் அரசு மகளிர் கலைக் கல்லூரி பி.பி.ஏ படிப்பும்,
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.ஏ பொருளியல் படிப்பும்,
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ பொருளியல் பாடமும்,
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் பி.பி.ஏ பாடத்தையும்,
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம், பி.எஸ்ஸி காட்சித் தொடர்பியல் பாடத்தையும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ பொருளியல்,
பி.எஸ்ஸி தாவரவியல் மற்றும் பி.பி.ஏ பாடத்தையும்,
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி கல்லூரியில் பி.சி.ஏ படிப்பும்,
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல், புள்ளியியல், பி.ஏ வரலாறு, பி.பி.ஏ படிப்புகளும் ஆரம்பிக்கவுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ பொதுநிர்வாகம் படிப்பும்,
பல்லடம் அரசுக் கல்லூரியில் பி.எஸ்ஸி ஆடை வடிவமைப்பியல், வேதியியல், இயற்பியல் மற்றும் பி.காம் படிப்பும்,
காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ பொருளியல் பாடத்தையும்,
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்ஸி காட்சித் தொடர்பியல், பி.காம், பி.சி.ஏ., பாடங்களும்,
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை மற்றும் பி.எஸ்ஸி கணினி அறிவியல் பாடத்தையும்,
திருப்பூர் சிக்காண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ பொருளியல் பாடத்தையும் தொடங்கவுள்ளனர்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.ஏ பொருளியல், வரலாறு மற்றும் பி.எஸ்ஸி புள்ளியியல், இயற்பியல் பாடத்தையும்,
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி பி.எஸ்ஸி வேதியியல் பாடத்தையும்,
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி உளவியல்,
பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்ஸி வேதியியல், இயற்பியல், விலங்கியல், தாவரவியல் பாடத்தையும்,
பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்., பி.எஸ்ஸி வேதியியல் பாடத்தையும்,
காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ., பி.எஸ்ஸி ஊட்டச்சத்துவியல் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் பாடத்தையும்,
ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் மற்றும் பி.எஸ்ஸி புள்ளியல் பாடத்தையும்,
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பி.காம் பாடத்தையும் ஆரம்பிக்கவுள்ளது
உயர்கல்வித் துறை.
முதுநிலை, எம்.பில் மற்றும் பிஹெச்.டி பிரிவுகள் அறிமுகப்படுத்தி விவரங்களை
www.tn.gov.in என்ற இணையதளத்தில் உயர்கல்வித் துறையின் அரசாணையைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ் இணைய செய்திகளை தெரிந்து கொள்ள உங்கள் குழுவில் 8667802578 என்ற WHATSAPP எண்ணை இணைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக