மாணவி முதல் விண்ணப்பத்தை வழங்கி விண்ணப்ப விநியோகத்தைத் தொடக்கிவைத்த பல்கலை. துணைவேந்தர் வி.முருகேசன்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் 25 புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் வி.முருகேசன் தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் 2018 - 19-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. அப்போது பல்கலை. துணைவேந்தர் வி.முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்ணாமலைப் பல்கலை.யில்தான் நாட்டிலேயே முதல் முறையாக தொலைதூரக் கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது.
நிகழ் கல்வியாண்டு (2018-19) முதுநிலை யோகா பட்ட மேற்படிப்பு, கணினி பட்டப் படிப்பு உள்பட 25 படிப்புகள் புதிதாகத் தொடங்கப்பட உள்ளன என்றார் அவர்.
*புதிய படிப்புகள்*
எம்.எஸ்சி. கேம் டெக்னாலஜி,
எம்.எஸ்சி. கவுன்சலிங் - ஸ்பிர்ட்சுவல் ஹெல்த்,
எம்.எஸ்சி. மல்டி மீடியா,
எம்.எஸ்சி. யோகா - வேல்யூ எஜூகேஷன்,
எம்.எஸ்சி. யோகா - வேல்யூ எஜூகேஷன் லேட்டரல் என்டரி,
பி.எஸ்சி. அனிமேஷன்,
பி.எஸ்சி. அட்வர்டைசிங் டிசைன்,
பி.எஸ்சி. பேஷன் டிசைன் - கம்யூனிகேஷன்,
பி.எஸ்சி. கேம் ஆர்ட் - டிசைன்,
பி.எஸ்சி. கேம் டிசைன் - டெவலப்மெண்ட்,
பி.எஸ்சி. கேம் புரோகிராம்,
பி.எஸ்சி. கிராபிக்ஸ் டிசைன்,
பி.எஸ்சி. இன்டீரியர் ஆர்கிடெக்சர்,
பி.எஸ்சி. மீடியா டெக்னாலஜிஸ்,
பி.எஸ்சி. போட்டோகிராபி,
பி.எஸ்சி. யூசர் இன்டர்ஃபேஸ் டிசைனிங் டெவலப்மெண்ட்,
பி.எஸ்சி. விஷூவல் எஃபக்ட்,
பி.எஸ்சி. விஷூவல் மீடியா,
பி.ஜி. டிப்ளமோ இன் சைபர் லா,
பி.ஜி. டிப்ளமோ இன் வேல்யூவேஷன் லேண்ட்,
பில்டிங், பி.ஜி. டிப்ளமோ இன் யோகா - வேல்யூ எஜூகேஷன்,
டிப்ளமோ இன் கவுன்சலிங் - ஸ்பிரிட்சுவல் ஹெல்த்,
டிப்ளமோ இன் பிரண்ட் டெஸ்க் ஆப்ரேஷன்ஸ்,
*சான்றிதழ் படிப்பு*
பிரண்ட் டெஸ்க் ஆப்ரேஷன்ஸ், வாஸ்து சான்றிதழ் படிப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக