1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளின் புதிய பாடத்திட்டங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வரும் 9ம் தேதி தொடங்குகிறது* தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்களை கற்பித்தல் தொடர்பாக, வரும் 9ம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளின் புதிய பாடத்திட்டங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வரும் 9ம் தேதி தொடங்குகிறது* தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்களை கற்பித்தல் தொடர்பாக, வரும் 9ம்

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்களை கற்பித்தல் தொடர்பாக, வரும் 9ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

தமிழக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக 1 முதல் 12ம் வகுப்பு வரை, பாடத்திட்டம் மாற்றப்பட்டு வருகிறது. நடப்பாண்டு 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி, பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், கற்றல், கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள, அவர்களுக்கு புதிய பாடத்திட்ட நூல்கள் குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தொடக்கப்பள்ளி மற்றும் 6ம் வகுப்பு பாடங்களை கற்பிக்கும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான பயிற்சி வழங்கப்படுகிறது.

இதேபோல், 9 மற்றும் 11ம் வகுப்பு பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 9ம் தேதி தொடங்கும் பயிற்சிக்கான பிரத்யேக அட்டவணை தயாரிக்கப்பட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

இதனை பின்பற்றி, பள்ளியின் வழக்கமான செயல்பாடுகளில் மாற்றமில்லாமல் பயிற்சியினை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குழுக்களாக பிரித்து, ஒவ்ெவாரு குழுவிற்கும் இரண்டு நாட்கள் வீதம் ஒன்றிய அளவிலான பயிற்சி நடக்கிறது. வரும் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை இப்பயிற்சியை நடத்த வேண்டும்.

இதேபோல், 6ம் வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு கணித, சமூக அறிவியல் பாடம் தொடர்பாக 9, 10 மற்றும் 11, 12ம் தேதிகளில் பயிற்சி நடத்தப்படும்.

மேலும், தமிழ், அறிவியல் பாடங்களுக்கு 13, 14 மற்றும் 16, 17ம் தேதிகளிலும், ஆங்கில பாடத்திற்கு 18, 19 மற்றும் 20, 21ம் தேதிகளில் குழுவாரியாக ஒன்றிய அளவிலான பயிற்சி அளிக்கப்படும்.

9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சிகள், குழு வாரியாகவும், பாட வாரியாகவும் நடத்தப்படவுள்ளது.

இவை, வரும் 9ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here