கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்*

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி)மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் பி.சி, எம்.பி.சி, டி.என்.சி மாணவ, மாணவியருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பப் படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், செயல்பாட்டிலுள்ள வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டும்.

கல்வி உதவித் தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு முன்பும், புதிய விண்ணப்பங்களை நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here