டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தினால் 1% தள்ளுபடி! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தினால் 1% தள்ளுபடி!

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோருக்கு 1 சதவிகித தள்ளுபடி வழங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

தற்போது, ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் மின்வாரியம் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளது.

அதன்படி, ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவோருக்கு கட்டணத்திலிருந்து 1 சதவிகிதம் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால், மக்கள் அலுவலகத்துக்கு தேவையில்லாமல் அலைய வேண்டாம். நீண்ட வரிசையில் கால் கடுக்க நிற்க வேண்டும். ஊழியர்களின் பணிச்சுமை குறையும், கவுண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அந்த ஊழியர்களை மற்ற பணிகளில் ஈடுபடுத்தலாம். மேலும், இதில் எந்தவித முறைகேடும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில், 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின்இணைப்புகளும் 21 லட்சம் விவசாய மின்இணைப்புகளும் 3 லட்சம் தொழிற்சாலை மின்இணைப்புகளும் 30 லட்சம் வர்த்தக நிறுவனங்களுக்கான மின் இணைப்புகளும் அடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here