மாணவர்களின் விவரங்கள் வெளியான விவகாரம்:தேர்வுத்துறை அதிகாரிகள் புகார்! , ஒரு மாவட்ட மாணவர்களின் விவரங்கள் 2000 முதல் 5000 ரூபாய் என்கிற விலையில், தனியார் நிறுவனங்கள் மூலமாக, விற்கப்பட்டதாகச் சமீபத்தில் புகார் எழுந்தன. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாணவர்களின் விவரங்கள் வெளியான விவகாரம்:தேர்வுத்துறை அதிகாரிகள் புகார்! , ஒரு மாவட்ட மாணவர்களின் விவரங்கள் 2000 முதல் 5000 ரூபாய் என்கிற விலையில், தனியார் நிறுவனங்கள் மூலமாக, விற்கப்பட்டதாகச் சமீபத்தில் புகார் எழுந்தன.


பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியான விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் சென்னை மாவட்டக் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தில் சேகரிக்கப்படுவது வழக்கம். இவை திருடப்பட்டு, ஒரு மாவட்ட மாணவர்களின் விவரங்கள் 2000 முதல் 5000 ரூபாய் என்கிற விலையில், தனியார் நிறுவனங்கள் மூலமாக, விற்கப்பட்டதாகச் சமீபத்தில் புகார் எழுந்தன.

இந்தப் புகாரின் அடிப்படையில், துறை ரீதியாக முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதில், மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியானதற்கான முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரசு தேர்வுகள் இயக்ககத்தில் ஒப்பந்த அடிப்படையில் அவுட்சோர்ஸ் முறையில் பணியாற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியானது தெரியவந்தது.

இந்தத் தனியார் நிறுவனங்களிடம் தகவல்களை வாங்கும் இடைத்தரகர்கள், அவற்றை மாவட்ட வாரியாக தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரிகள் நேற்று (ஜூலை 29) சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பள்ளி மாணவர்களின் விவரங்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக, சென்னை மாநகர ஆணையரிடம் பள்ளிக் கல்வித் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here