பி.இ. கல்விக் கட்டண நிர்ணய ஆய்வுக்குழு: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைமுறை* *🔶பொறியியல் கல்விக் கட்டண ஆய்வுக் குழுவை மீண்டும் நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது* *🔶2015-ஆம் ஆண்டுக்குப் பின் முடங்கியிருந்த இந்த ஆய்வுக் குழு, இப்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பி.இ. கல்விக் கட்டண நிர்ணய ஆய்வுக்குழு: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைமுறை* *🔶பொறியியல் கல்விக் கட்டண ஆய்வுக் குழுவை மீண்டும் நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது* *🔶2015-ஆம் ஆண்டுக்குப் பின் முடங்கியிருந்த இந்த ஆய்வுக் குழு, இப்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது*

*சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த தொடர் புகார்களைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் கட்டண நிர்ணயக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது*

*🔶இந்தக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே, சுயநிதி கல்லூரிகள் மாணவர்களிடம் வசூலிக்கவேண்டும்*

*🔴🔴கட்டணம் எவ்வளவு?*

*🔶அதாவது, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்கள் தரச் சான்று பெற்ற படிப்புகளில் சேரும்போது ஆண்டுக்கு ரூ. 55 ஆயிரம் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது*

*🔶தரச் சான்று இல்லாத படிப்பில் சேரும் மாணவர்கள் ரூ. 50 ஆயிரம் ஆண்டுக் கட்டணம் செலுத்தவேண்டும்*

*🔶கலந்தாய்வு மூலமாக அல்லாமல், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதி கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் தரச் சான்று பெற்ற படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ. 87 ஆயிரம் செலுத்தினால் போதுமானது*

*🔶தரச் சான்று இல்லாத படிப்பில் சேரும் மாணவர்கள் ரூ. 85 ஆயிரம் ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைத் தாண்டி கூடுதலாக கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது*

*🔴🔴கட்டண ஆய்வுக் குழு*

*🔶இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் சுயநிதி கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கட்டண ஆய்வுக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது*

*🔶இந்தக் குழு, சுயநிதி கல்லூரிகளில் நேரடியாகவும், மாணவர்களிடமிருந்தும் வரும் கூடுதல் கட்டணம் தொடர்பான புகாரின் அடிப்படையிலும் நேரடியாக ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்*

*🔶இவ்வாறு அமைக்கப்படும் ஆய்வுக் குழு ஓராண்டுக்கு மட்டுமே செல்லத்தக்கத்தாக இருக்கும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும்*

*🔶கடைசியாக 2013-14 கல்வியாண்டில் இந்த கட்டண ஆய்வுக் குழு மாற்றியமைக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.செல்லதுரை தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது*

*🔶அதன் பிறகு, இந்தக் குழுபுதுப்பிக்கப்படாமலும், மாற்றியமைக்கப்படாமலும் முடங்கியிருந்தது*

*🔶இதனால், சுயநிதி கல்லூரிகள் மாணவர்களிடம் தடையின்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்வதாகவும், மீண்டும் இந்த ஆய்வுக் குழுவை அமைத்து, கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன*

*🔶அதனடிப்படையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆய்வுக் குழு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.செல்லதுரை தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது*

*🔶புதிய ஆய்வுக் குழு அமைக்கப்படும் வரை, பேராசிரியர் செல்லதுரை தலைமையிலான குழு செயல்பாட்டில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது*

*🔴🔴புகாரை எப்படித் தெரிவிப்பது?*

*🔶இது குறித்து ஆய்வுக் குழு தலைவர் செல்லதுரை கூறுகையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மாணவர்களும், பெற்றோரும் இந்தக் குழுவிடம் அச்சமின்றி புகார் தெரிவிக்கலாம்*

*🔶புகார் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். 94441 40138 என்ற செல்லிடப்பேசியில் நேரடியாக என்னைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அல்லது  tncapitation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகாரை அனுப்பலாம்*

*🔶புகாரின் அடிப்படையில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here