நீட் தேர்விற்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தகவல்கள் வெளியானது குறித்து சிபிஎஸ்இ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீட் தேர்விற்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தகவல்கள் வெளியானது குறித்து சிபிஎஸ்இ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்



நீட் தேர்வை நடத்திய, மத்திய இடைநிலை கல்வி வாரியத் தலைவர் அனிதா கர்வாலுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில், “ இந்த கடிதம் உங்களின் கவனத்திற்கு ஏன் எழுதப்படுகிறது என்றால், தற்போது, ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களில் நீட் தேர்வு எழுதிய 2 லட்சம் மாணவர்களின் விவரங்கள் ஒரு சில இணையதளங்கள் மூலம் விற்பனையான தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்” என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சிபிஎஸ்இ நடத்தும் தேர்வுகள் குறித்து பல்வேறு கேள்விகளையும் கடிதத்தில் எழுப்பியுள்ளார். தகவல்கள் வெளியானதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி அந்த கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

ஊடக அறிக்கையின்படி, “இந்த ஆண்டில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் தகவல்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தொலைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் வீட்டு முகவரிகள் ஆகிய தகவல்கள் இணையத்தளத்தில் விற்பனையாகியிருக்கிறது. இந்த முறைகேடுகளை விசாரிப்பதற்கு விசாரணை ஆணையம் அமைத்து. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய மீறல்கள் மீண்டும் ஏற்படுவதை தடுக்க கூடுதல் பாதுகாப்புப் பெட்டிகளில் வைக்க நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதிய சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களின் தகவல்கள் இணையதளங்களில் கிடைக்கிறது. இந்த தகவல்களைப் பெறவேண்டும் எனில் ரூ.2 லட்சம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியான நிலையில், ராகுல் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே 6ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 13லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அவற்றிற்கான முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here