கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில் 23/08/2010 க்குப் பிறகு அரசு விதிகள் மூலம் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டியது கட்டாயம்.
ஆனால் இந்த நடைமுறை தமிழகத்தில் (முன் தேதியிட்ட) செயலரின் செயல்முறை சுற்றறிக்கை 16/11/2012 ல் தான் வெளிவந்தது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழக பள்ளிகளில் இது சம்மந்தமான ஆணைகளை முறையாக பெறப்படாமையாலும் காலம் தாழ்த்தி நடைமுறைப் படுத்தியமையாலும் ஏற்பட்ட சிக்கலில் தற்போது சிக்கித் தவிக்கும் ஆசிரியர்கள் மூவாயிரத்திற்கும் மேல்...
பதிவு முப்பு அடிப்படையில் தமிழக அரசின் ஒரே அரசாணையின் கீழ்2010 & 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பலகட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்புகளில் கலந்தவர்களில் ஒரு சாரருக்கு மட்டும் TET லிருந்து விலக்கு அளித்ததில் உள்ள முரண்பாடுகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை.
புதிய ஆசிரியர் பணி இடங்கள் நிரப்புதல் தொடர்பாக
அரசு உதவி பெறும் பள்ளிகளின் முதன்மை உறுப்பினர்கள் மற்றும் செயலர்களின் தார்மீக உரிமைகளை முன் அறிவிப்பு மற்றும் அரசாணை ஏதும் இன்றி நீக்கிய முரண்பாடுகள் இன்றுவரை களையப்படவில்லை.
இவைகள் காரணமாக பணியில் சேர்ந்த பின்னர் பல பிரட்சனைகளைச் சந்திப்பது இந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்.
இதில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளைக் காரணம் காட்டி இன்று வரை ஊதியம், வளரூதியம், ஊக்க ஊதியம், விடுப்பு பலன்கள், பணிப்பதிவேடு போன்ற பலவற்றிலும் பலன் இன்றி பிரட்சனைகள் தீராமல் தொடர்கிறன.
இன்று வரை பணிப்பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயணிக்கும் TET நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் வேண்டுகோள்கள் பல்வேறு ஊடகங்கள் வழியாக வெளிவந்த நிலையிலும் இன்று வரை இவர்களின் கண்ணீர் வேண்டுதல்களை செவி சாய்க்க யாரும் முன்வராததால் மனதார தினம் தினம் செத்துப் பிழைக்கும் அவலம்.
கடந்த ஏழு ஆண்டுகள் இந்த ஆசிரியர்களின் நிலை மாற அறவழியில் பல்வேறு விதமாக தமிழக அரசின் கவனத்தில் கொண்டு செல்லும் முயற்சிகளைச் செய்தும் இதுவரை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தில் சென்றதா இல்லையா என்ற வினாவிற்கு பதில் கிடைக்காமல் இந்த TET நிபந்தனை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
இது சம்மந்தமான உதவிகளை பல முறை ஆசிரியர் சங்கங்கள் அரசிடம் கேட்டும் இதுவரை அரசு செவிசாய்க்க முன் வரவில்லை.
போராடிப் பெறக்கூட மனமும் சக்தியும் இல்லாத நிலையில் கானல் நீராய் இந்த ஆசிரியர்கள் காத்து உள்ளனர்.
அரசு விதிகளின்படி ஆசிரியர் பணியில் இவ்வளவு வருடங்கள் சிறப்பாக பணியாற்றி தகுதியை மேம்படுத்தியுள்ள இவர்களின் கண்ணீர் வேண்டுதல்களுக்கு தீர்வுTET லிருந்து இந்த மூவாயிரம் நிபந்தனை ஆசிரியர்களுக்கும் முழுமையான விலக்கு என்பது மட்டுமே.
கல்வி சார்ந்த அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், கல்வித் துறை அரசு அலுவலர்கள், தமிழக பல்வேறு ஆசிரியர் சங்க முதன்மைப் பிரதிநிதிகள் போன்ற அனைவருக்கும் தாழ்மையுடன் முன் வைப்பது யாதெனில் இந்த TET நிபந்தனை ஆசிரியர்களின் பிரட்சனைகளை முறையாக தமிழக அரசின் கவனத்தில் எடுத்து சென்று நல்ல தீர்வு காண உதவ வேண்டும் என்பது மட்டுமே.
இதுவரை எப்படியோ... ஆனால் இனி இந்த TET நிபந்தனை ஆசிரியர்களின் ஆசிரியப் பயணம் வரும் மார்ச்சு 2019 உடன் முடியும் நிலையில் இறுதி நாளை நோக்கி பயணிக்கும் நிலையில் உள்ளனர்.
இந்த TNTET நிபந்தனைகள் ஆசிரியர்களின் கோரிக்கை 23-08-2010 முதல் 16-11-2012 வரை நியமனம் பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், பாரபட்சமின்றி TETலிருந்து விலக்கு என்பதே.
தமிழக கல்வி துறையில் தற்போதைய சூழலில் ஆசிரியர்களின் குறைகளை வெகுவாக தீர்வு கண்டு வருவதால், மாண்புமிகு தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் மூலம் இனியாவது நல்ல விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த TET நிபந்தனை ஆசிரியர்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.
ஆக்கம் :
ஆ. சந்துரு (ப.ஆ) (கோவை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக