பி.இ.: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 6 -இல் தொடக்கம்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பி.இ.: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 6 -இல் தொடக்கம்*

*🎯பி.இ. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை ஜூலை 6 -ஆம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது*

*🎯தமிழகம் முழுவதும் 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,76,865 பி.இ. இடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது*

*🎯இதற்கு விண்ணப்பித்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களில் தகுதிபெற்ற 1,04,453 பேருக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28 -ஆம் தேதி வெளியிடப்பட்டது*

*🎯இந்த முறை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன் -லைன் மூலம் நடத்தப்பட உள்ளது*

*🎯இதன் காரணமாக, மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம்*

*🎯வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களில், கட்டணம் ஏதுமின்றி கலந்தாய்வில் பங்கேற்கலாம்*

*🎯எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 10 -ஆம் தேதி நிறைவடைந்த பின்னர், பி.இ. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது*

*🔵🔵சிறப்புப் பிரிவு கலந்தாய்வு*

*🎯சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை முன்கூட்டியே ஜூலை 6 -ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது*

*🎯இவர்களுக்கான கலந்தாய்வு ஆன்-லைன் முறையில் அல்லாமல், ஏற்கெனவே உள்ள நடைமுறையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமே நடத்தப்பட உள்ளது*

*🎯இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 6 -ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடத்தப்பட உள்ளது*

*🎯முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். இவர்களுக்கென 6,000-த்துக்கும் அதிமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன*

*🎯இருந்தபோதும் 200 -க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளனர். எனவே, விண்ணப்பித்த அனைவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்*

*(மின்னல் கல்வி செய்தி குழுவில் இணைய MKS என type செய்து   6380815982 க்கு  whatsapp இல் அனுப்பவும்)*

*🎯இரண்டாம் நாளான ஜூலை 7 -ஆம் தேதி, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கென 150 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் பங்கேற்க 300 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்*

*🎯ஜூலை 8 -ஆம் தேதியன்று, விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும்*

*🎯இவர்களுக்கு 500 இடங்கள் ஒதுக்கப்படும். இதில் பங்கேற்க 750 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்*

*🎯கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து எடுத்து வருவதுடன், கட்டணத்துக்கான வரைவோலையையும் எடுத்து வரவேண்டும் என்றார் அவர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here