நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது?: சிபிஎஸ்இ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது?: சிபிஎஸ்இ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது*

*💠நீட் தேர்வு வினாத்தாளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்க என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது என பதிலளிக்குமாறு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது*

*💠இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது*

*💠அவர் தமது மனுவில், கடந்த மே மாதம் 6 - ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் இயற்பியல் பாடத்தில் 10 வினாக்கள், வேதியியலில் 6, உயிரியலில் 33 என 49 வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டிருந்தன*

*💠இதனால், தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தவறாகக் கேட்கப்பட்டிருந்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும். அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்*

*💠இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது*

*💠இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மொழிபெயர்ப்பில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டன?*

*💠வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகளைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்த என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?*

*💠மொழிபெயர்ப்பின்போது அதற்குரிய அகராதியைக் கொண்டு வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட்டனவா?*

*💠அப்படியென்றால் இந்த தகவல்கள் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்க அறிவுரையாக வழங்கப்படுகிறதா? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 6 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்*

*💠அவசர அவசரமாக கலந்தாய்வு:  இதைத்தொடர்ந்து, டி.கே.ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறியது*

*💠நீட் தேர்வு தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சிபிஎஸ்இ -க்கு 4 கேள்விகள் எழுப்பி உள்ளது*

*அந்த கேள்விகளுக்கான பதில் வரும் 6-ஆம் தேதி, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்*

*💠7-ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்படும் என அரசு வழக்குரைஞர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்*

*💠ஆனால் 1-ஆம் தேதியே மருத்துவ கலந்தாய்வு தொடங்கி உள்ளது. இதுபற்றி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வழக்கு விசாரணையின்போது நாங்கள் முறையிடுவோம்*

*💠அரசு, நீட் தேர்வு சம்பந்தமான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே மருத்துவக் கலந்தாய்வை அவசர அவசரமாக தொடங்கியுள்ளது என்றார் அவர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here