*🔴கல்விக் கடன் வழங்க மறுப்பு தெரிவித்து வங்கி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான் என, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மாணவி தீபிகா மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்*
*🔴நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி தீபிகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் நர்சிங் படிக்கிறேன்*
*🔴பாரத ஸ்டேட் வங்கியின் தலைஞாயிறு கிளையில் கல்விக் கடன் கோரி விண்ணப்பித்தேன்*
*🔴ஆனால் வங்கி நிர்வாகம் கல்விக்கடன் வழங்க மறுத்துவிட்டது. எனவே ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கல்விக் கடன் வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்*
*🔴இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாணவியின் தந்தை ஏற்கெனவே வாங்கிய கடனைக் கட்டத் தவறியதால், அவரது மகளுக்கு கல்விக் கடன் வழங்க மறுத்து வங்கி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான் என தீர்ப்பளித்திருந்தது*
*🔴🔴இந்த உத்தரவை எதிர்த்து மாணவி தீபிகா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்*
*🔴இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக