*♈தமிழகத்தில் 44 அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்*
*♈இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது*
*♈இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: நபார்டு கடனுதவித் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகத்துடன் கூடிய 22 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை முதல்வர் பழனிசாமி திறந்தார்*
*♈மேலும், நபார்டு கடனுதவித் திட்டத்தின் கீழ், அரியலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 44 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்ட 306 வகுப்பறைக் கட்டடங்கள், 44 ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறைகள், சுற்றுச்சுவர் உள்ளிட்டவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்*
*♈மேலும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், அரியலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் அமைந்துள்ள 58 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்தார்*
*♈இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக