*🔶அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனின் எம்பிபிஎஸ் விண்ணப்பம், புகைப்பட குளறுபடியால் நிராகரிக்கப்பட்டுள்ளது*
*🔶சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் கோகுல கிருஷ்ணன்*
*🔶இவர் தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் தொடுவானம்' என்ற நீட் பயிற்சியில் இணைந்து படித்துள்ளார். நீட் தேர்வில் 392 மதிப்பெ பெற்றுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் கோகுல கிருஷ்ணன்தான்*
*🔶இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அரசு எம்.பி.பி.எஸ். இடத்தைப் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது*
*🔶இதுதொடர்பாக மாணவர் விசாரித்தபோது, விண்ணப்பத்தில் மாணவரின் புகைப்படம் சரியாக ஒட்டப்படவில்லை என்றும், அதன் காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்*
*🔶இதன் காரணமாக மனமுடைந்த மாணவர், கலை -அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் படிப்பில் சேர்ந்துவிட்டார்*
*🔶ஆனால், இதுபோன்ற சிறிய காரணங்களுக்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்*
*🔶இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் கூறுகையில், குறிப்பிட்ட மாணவரின் விண்ணப்பம் புகைப்படத்தில் ஏற்பட்ட குளறுபடியினால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதனை மீண்டும் பரிசீலனை செய்து தரவரிசைப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக