லஞ்சம் வாங்கினாலும் கொடுத்தாலும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் . ஆனால் லஞ்சம் கொடுக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டால் 7 நாட்களுக்குள் புகார் அளிக்க வேண்டும். புதிய திருத்தங்களுடன் ஊழல் தடுப்பு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் நேற்று (24.07.2018)நிறைவேறியது.  - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

லஞ்சம் வாங்கினாலும் கொடுத்தாலும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் . ஆனால் லஞ்சம் கொடுக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டால் 7 நாட்களுக்குள் புகார் அளிக்க வேண்டும். புதிய திருத்தங்களுடன் ஊழல் தடுப்பு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் நேற்று (24.07.2018)நிறைவேறியது. 


லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை தண்டனை அளிக்கப்படும் என்ற புதிய திருத்தங்களுடன் ஊழல் தடுப்பு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் நேற்று (24.07.2018)நிறைவேறியது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் இந்த சட்ட முன்வரைவு அமலுக்கு வரும்.

மாநிலங்களவையிலும் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்ட ஊழல் தடுப்பு (திருத்தம்) சட்ட முன்வரைவு 2018 நான்கு மணி நேர விவாதத்திற்கு பின்னர் நிறைவேறியது.

புதிய ஊழல் தடுப்புச் சட்ட முன்வரைவின்படி, லஞ்சம் வாங்கினாலும் கொடுத்தாலும் 3லிருந்து 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. . ஆனால் லஞ்சம் கொடுக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டால் 7 நாட்களுக்குள் புகார் அளிக்க வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளதாவது :

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும். அதாவது அனுமதி பெற்ற பின்னரே விசாரணையைத் தொடங்க முடியும். ஒரு அதிகாரி ஓய்வு பெற்ற பின்னர் பதவியிலிருக்கும் போது அவர் செய்த குற்றங்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானாலும் முன் அனுமதி பெற்ற பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும். அரசு அனுமதி அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும்.

லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் இழைத்தவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான புதிய பிரிவும் இச்சட்ட முன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.

இச்சட்டத்தால் நேர்மையான அரசு அதிகாரிகள் எந்தவித நெருக்குதலுக்கும் ஆளாகாமல் பணியாற்ற முடியும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தை இந்த சட்டத்திருத்தம் நீர்த்துப் போகச் செய்து விடும் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here