அதிர்ச்சி .......Youtube -ஐ பார்த்து பிரசவம் செய்து மனைவியின் உயிரை பறித்த கனவன்...... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அதிர்ச்சி .......Youtube -ஐ பார்த்து பிரசவம் செய்து மனைவியின் உயிரை பறித்த கனவன்......


கேட்டதும் பகீரென இருந்தது. இப்படியெல்லாம்கூட நடக்குமா? எப்போதாவது சில சம்பவங்கள் நிகழும். அப்படி நடந்த சம்பவம்தான் இது.

திருப்பூர் அருகே நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஊர் புதுப்பாளையம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கார்த்திக். திருப்பூரில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி கிருத்திகா தனியார் பள்ளி ஆசிரியை. கார்த்திக்கின் நெருக்கமான நண்பர் பிரவீன். அடிக்கடி கார்த்திக் வீட்டுக்கு வந்து போக இருந்திருக்கிறார் பிரவீன். அப்போதுதான் நண்பனுக்கு ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார் பிரவீன்.

அந்த ஐடியா என்ன தெரியுமா? ‘உன்னோட மனைவி கர்ப்பமானதும் நீ ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகாதே. நாம வீட்டுலேயே பிரசவம் பார்க்கலாம். அதுவும் இயற்கை முறையிலேயே பார்க்கலாம். அந்தக் காலத்தில் எல்லாம் ஹாஸ்பிடலா இருந்துச்சு? எல்லாமே வீட்டில்தான் பார்த்திருக்கிறாங்க. யூட்யூப் போய் பிரசவம் பார்ப்பது எப்படின்னு போட்டா வீடியோ வருது. அதைப் பார்த்தே நாம பிரசவம் பார்த்துடலாம். செக் அப்புக்கு கூட உன் மனைவியை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய்டாதே. அப்புறம் டெலிவரிக்கு வரச் சொல்லுவாங்க’ எனச் சொல்ல, நண்பன் சொல்லே கார்த்திக்கு வேத வாக்காக மாறியது. மனைவியிடமும் இதைச் சொல்லியிருக்கிறார் கார்த்திக்.

முதலில் கிருத்திகா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் பிறகு அவரும் மனம் மாறி யூட்யூப் பிரசவத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறார். கிருத்திகா கர்ப்பமடைய, அவரை செக்அப் உட்பட எதற்கும் மருத்துவமனைக்கே அழைத்து செல்லவில்லை. நாட்கள் நகர்ந்திருக்கிறது. கிருத்திகாவின் உறவினர்கள் எவ்வளவோ அட்வைஸ் செய்தும் அவர்கள் கேட்கவில்லை.

பிரசவத்துக்கு நாளும் நெருங்கியது. வயிற்றுவலியால் துடித்திருக்கிறார் கிருத்திகா. கணவர் கார்த்திக்கும் அவரது நண்பர் பிரவீனும் தயாராக வைத்திருந்த செல்போனில் பிரசவம் பார்க்கும் வீடியோவை ஓடவிட்டு, அதைப் போலவே செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஏதேதோ முயற்சி செய்து குழந்தையை வெளியே இழுத்துவிட, வலியால் அலறித் துடித்து கடைசி மூச்சையும் இழுத்து நிறுத்திக் கொண்டார். ம்ம்ம்... கிருத்திகா உயிர் பிரிந்துவிட்டது. குழந்தை மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறது. போலீஸ் இப்போது விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது.

-வித்யாகுமார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here