*🔴புழல் வட்டார கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் அரசு அங்கீகாரமின்றி தனியார் மழலையர் பள்ளிகள் இயங்கி வருவதாக, ஏராளமான புகார்கள் வந்தன*
*🔴இதன் அடிப்படையில் இந்த பகுதியில் செயல்படும் பல்வேறு தனியார் மழலையர் பள்ளிகளை திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினார்*
*🔴அப்போது, அடிப்படை வசதிகள் இன்றியும், அரசின் உரிய அங்கீகாரம் இல்லாமலும் மழலையர் பள்ளிகள் இயங்கியது தெரியவந்தது*
*🔴இதன்படி, சூரப்பட்டு பகுதியில் 1, மணலியில் 3, காலடிப்பேட்டையில் 1, திருவொற்றியூர் பகுதியில் 3 தனியார் மழலையர் பள்ளிகள் அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பள்ளிகளுக்கு சீல் வைத்தனர்*
*🔴அத்துடன் இப்பள்ளிகளை உடனடியாக மூடி சீல் வைப்பதற்கு மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திரன் உத்தரவிட்டார்*
*🔴இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேர்க்கவும், அங்கீகாரமில்லாத பள்ளியில் சேர்க்க வேண்டாம் எனவும் பெற்றோரிடம் கல்வி அதிகாரி ராஜேந்திரன் வலியுறுத்தினார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக