ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும் : பல்கலைகழகங்களுக்கு யுஜிசி உத்தரவு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும் : பல்கலைகழகங்களுக்கு யுஜிசி உத்தரவு*

*💫மனித வள மேம்பாட்டுத்துறை, பல்கலைகழக மானிய குழு(யுஜிசி) சார்பில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனு  ஆகஸ்ட் 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது*

*💫அதுவரை அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் நியமனங்களை தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, துணை செயலாளர், யுஜிசி செயலாளருக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்*

*💫இந்த கடிதத்தின் அடிப்படையில் அனைத்து பல்கலைகழகங்களிலும் ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்குமாறும், மத்திய, மாநில பல்கலைகழகங்கள், மானியம் பெறும் கல்வி நிறுவனவங்களின் பதிவாளர்களுக்கு யுஜிசி செயலாளர் உத்தரவிட்டுள்ளார்*

*💫அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது*

*💫அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு, யுஜிசி சார்பில் தனித்தனியே மனு அளிக்கப்பட்டுள்ளது*

*💫அதனால் ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக அறிவிக்கை வெளியிட்டு, ஆசிரியர் நியமனத்துக்கான பணிகள் நடந்துகொண்டிருந்தால் மறு உத்தரவு வரும் வரை ஆசிரியர் நியமனம் தொடர்பான அனைத்து பணிகளையும் தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here