உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணையை நாளை தாக்கல் செய்ய வேண்டும்; தாக்கல் செய்யாவிட்டால் அவமதிப்பை சந்திக்க நேரிடும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
நீதிமன்ற உத்தரவை செயல் படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு என உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியது.
முன்னதாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது வாதிட்ட திமுக வழக்கறிஞர் வில்சன், நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தவில்லை. எனவே மாநில தேர்தல் ஆணையரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என வாதிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக