பல ஆண்டுகளுக்குப் பின் பூமிக்கு அருகில் செவ்வாய்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பல ஆண்டுகளுக்குப் பின் பூமிக்கு அருகில் செவ்வாய்!


பூமிக்கு மிக அருகில் பல ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய் கோள் வரவிருப்பதால் அந்த நிகழ்வைப் பார்க்க பிர்லா கோளரங்கத்தில் இன்று (ஜூலை 31) சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் வரவிருக்கிறது. பூமியிலிருந்து குறைந்தபட்சம் 5 கோடியே 76 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில்செவ்வாய் கோள் வரப்போகிறது.

செவ்வாய் கோளிலில் தற்போது பெரிய புயல் வீசி வருகிறது. இந்தப் புயல் இன்னும் சில நாட்களுக்கு செவ்வாய் கோளை அப்படியே சுற்றிச் சுற்றி வரும் என்று கூறப்படுகிறது. இதனால், செவ்வாய் மிகவும் வெளிச்சமாக இருக்கும். எனவே செவ்வாய் கோளை நம்மால் இன்று காண இயலும் என்று நாசா தெரிவித்திருக்கிறது. வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பார்க்க முடியும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

செவ்வாய் இனி பூமிக்கு அருகில் 2020ஆம் ஆண்டு வரும். இதற்கு முன்பு 15 ஆண்டுகளுக்கு முன்பு 2003ஆம் ஆண்டில் செவ்வாய் கோள் பூமியிலிருந்து 5 கோடியே 30 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு வந்தது. அதன் பின் இப்போது தான் பூமிக்கு அருகில் வருகிறது.

இன்று பூமிக்கு அருகில் செவ்வாய் வரும் நிகழ்வை பார்க்க, சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை இந்த நிகழ்வை, தொலைநோக்கி வழியாகப் பொதுமக்கள் பார்க்கலாம் எனத் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here