பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் நலனுக்காக கடந்த மூன்றாண்டு பி.இ. கட்-ஆப், தரவரிசை மற்றும் கல்லூரி விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம், மாணவர்கள் தங்களுக்கு எந்த கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை ஓரளவுக்கு கணித்துக் கொள்ள முடியும் என்கிறார் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:
வழக்கமாக முந்தைய ஓராண்டு கலந்தாய்வு விவரம் மட்டுமே வெளியிடப்படும். இந்த முறை கடந்த 3 ஆண்டுகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்ச தரவரிசைக்கு எந்தக் கல்லூரி கிடைக்கும், அதற்கான கட்-ஆப் மதிப்பெண் மற்றும் கல்லூரி விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
கல்லூரி முதல்வரின் பெயர், கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக