கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு*

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவம்-கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்) மற்றும் உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக். படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு படிப்புக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன. பி.டெக். உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக். கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 460 இடங்கள் உள்ளன.

கால்நடை மருத்துவப் படிப்புக்கு 10,207, பி.டெக். படிப்புகளுக்கு 2,010 என மொத்தம் 12,217 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான தர வரிசைப் பட்டியல் சென்னை வேப்பேரி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் வெளியிடப்பட உள்ளது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பாலச்சந்திரன் தர வரிசைப் பட்டியலை வெளியிட உள்ளார்.

இம்மாதம் மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here