ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்த நாடுகளுக்குக் கட்டணச் சலுகை வழங்குவதாக இந்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வர்த்தகத் துறை அமைச்சகம் ஜூலை 1ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குறைந்தபட்ச வளர்ச்சியைக் காணும் வளரும் நாடுகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கும் விதமாக ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்த (ஏபிடிஏ) உறுப்பு நாடுகளுக்குக் கட்டணச் சலுகை வழங்க இந்தியா உறுதியளிக்கிறது. இதன்படி சுமார் 3,142 பொருட்களுக்கு இந்தக் கட்டணச் சலுகையை இந்தியா அளிக்க முடிவெடுத்துள்ளது' என்று கூறியுள்ளது.
ஏபிடிஏவில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, லாவோஸ், சீனா, மங்கோலியா மற்றும் தென்கொரியா ஆகிய ஏழு நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் நான்காவது கட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் புதிய கட்டணச் சலுகைகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்த ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதியிலேயே இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த அமைப்பில் உள்ள ஏழு நாடுகளும் ஒன்றுக்கொன்று எளிதாக வர்த்தகம் மேற்கொள்ளவும், கூடுதல் வரிகள் சுமத்துவதைத் தவிர்க்கவும், முதலீடுகள் மற்றும் சேவைகளை ஊக்குவிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக