அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை சப்ளை செய்த நிறுவனத்தில் வருமானவரி சோதனை* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை சப்ளை செய்த நிறுவனத்தில் வருமானவரி சோதனை*

*🔴திருச்செங்கோடு: அரசுப்பள்ளிகள்,அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அங்கான்வாடி மையங்களுக்கு சத்து மாவு,முட்டை,பருப்பு போன்றவைகளை விநியோகம் செய்து வரும் திருச்செங்கோடு தனியாா் நிறுவனத்தில்  வருமான வரித்துறையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்*

*🔴நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆண்டிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் 15 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினா் காலையில் சோதனையில் ஈடுபட்டனா்*

*🔴மேலும் இந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலா்கள் வீடுகள், அவர்களது நண்பா்கள் மற்றும் உறவினா்கள் வீடுகள், சேமிப்பு கிடங்குகள், தொடா்பு நிறுவனங்கள் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனா்*

*🔴சோதனையில் கைபற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நிறுவன அலுவலா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் பகுதிகளில் காவல்துறையினா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here