*🎯கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை விடுமுறை நாட்களில் பணிக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது*
*🎯ஆசிரியர் அல்லாத அலுவலகப் பணியாளர்கள் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்*
*🎯இந்த கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து, அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது*
*🎯அதன்படி, பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் ஆகியோருக்கு வாரத்தில் 5 நாட்கள் பணி நாட்களாகும்*
*(மின்னல் கல்வி செய்தி குழுவில் இணைய MKS என type செய்து 6380815982 க்கு whatsapp இல் அனுப்பவும்)*
*🎯அரசு விடுமுறைக் காலங்களில் அவர்கள் பணிக்கு வரப் பணிக்கப்பட்டால் அவர்களுக்கு வேறு ஒரு நாளில் ஈடுகட்டும் விடுப்பு வழங்கலாம்*
*🎯இது போல ஒரு பணியாளருக்கு ஒரு ஆண்டுக்கு 10 நாட்களுக்கு மிகாமலும், மாற்றுப் வேலை செய்த 6 மாதத்துக்குள் அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் வழங்கலாம். இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக